கோவணக்கட்டு
கோவணக்கட்டு


தூக்குவாளி தூக்கிக்கிட்டு பழையசோத்த ஊத்திக்கிட்டு பச்சமொழகா வறுத்துக்கிட்டு பச்சவெங்காயம் உறிச்சுக்கிட்டு
காளைரெண்ட பூட்டிக்கிட்டு கலப்பையையும் ஏந்திக்கிட்டு கால்கடுக்க நடந்துகிட்டு
காடுகரை கடந்துகிட்டு
கட்டாந்தரை உழுதுகிட்டு
புழுதியாக ஆக்கிக்கிட்டு புதுத்தண்ணி பாய்ச்சிக்கிட்டு சேத்துவரப்பு போட்டுக்கிட்டு
செவலைக்காளை மேய்ச்சுக்கிட்டு சாணியெல்லாம் அள்ளிக்கிட்டு கூலத்தோட சேர்த்துக்கிட்டு குப்பையாக மாத்திக்கிட்டு
இயற்கை உரம் இட்டுக்கிட்டு இளம்நாத்த நட்டுக்கிட்டு களையெல்லாம் புடுங்கிக்கிட்டு களத்துமேட்டில் ஏறிஞ்சுக்கிட்டு
நட்டபயிர் பார்த்துக்கிட்டு
நாளெல்லாம் உழைத்துக்கிட்டு வளர்ந்தபயிர் அறுத்துக்கிட்டு வண்டியில ஏத்திக்கிட்டு
சந்தையில நின்னுக்கிட்டு விலைபேசி வித்துக்கிட்டு
வீடுவந்து சேருதுங்க
விவசாயி கோவணக்கட்டு.