நானும் போகியும்
நானும் போகியும்

1 min

392
பழையன போக்கி புதியன
தேக்கி
ஏழையின் வீட்டில் எரியுது
பழந்தீ
மார்கழிப் பனியில் மாசினைப் போக்கி
எந்தன் மனதில் கசடினை
நீக்கி
எரியும் நெருப்பில் எள்நெய்
ஊற்ற
விரியும் நன்மை நம்மை
நோக்கி
மூளும் புகையில் ஆளும்
செந்தீ
வாழும் பகையை வீழ்த்தும் வினைத்தீ
கொளுத்தும் தழலில் கருகும் பழைமை
வாழ்த்தும் என்றும் வளரும்
வாழ்வில்
வானும் நிலவும் வளமான
உறவாம்
நானும் போக்கியும் நற்றமிழ்
மரபாம்.