STORYMIRROR

SANTHOSH KANNAN

Romance

3  

SANTHOSH KANNAN

Romance

கைத்தடிக் காதல்

கைத்தடிக் காதல்

1 min
608


ஏன்டி பொன்னாத்தா

எழுபது வயசாச்சு

இன்னமும் கண்ணுக்கு

அழகாத் தெரியுறியே


பொன்னுக்கு வெட்கம்

பொசுக்குனு வந்துற

புருவம் உயர்த்தி

புன்சிரிப்பு கிழவனுக்கு


சாலை ஓரம்

காதல் கீதம்

மாலைப் பொழுதில்

மயக்கம் தந்திட


கண்ண தாசனின்

காதல் வரிகள்

கிழவியின் உதட்டில்

அழகாய் வெளிவர


காவிய நாயகன்

கிழவனின் கண்ணில்

கடந்த காலம்

வந்தே போனது


ஏக்கப் பெருமூச்சில்

தூக்கி எறிந்தார்

கைத்தடி துறந்து

கரத்தினைப் பிடித்தார்


வாலிபத் திமிரு

வந்தது போலும்

வயதை மறந்து

வளமாய் நடந்தார்


கிழவன் பிடியில்

சிக்கிய கையில்

கிழவியின் உசுரு

எமனையும் வென்றிட


புதிய உலகம்

உதயம் ஆகிட

அப்படி என்னதான்

இருக்கோ இந்தக் காதலில்.



Rate this content
Log in