எதிர்கால மனைவியினைப் பற்றிய எதிர்பார்ப்புகள்!
எதிர்கால மனைவியினைப் பற்றிய எதிர்பார்ப்புகள்!
என் எதிர்கால மனைவி அதிக கோபம் கொள்ளாதவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி அதிக இரக்கம் கொண்டவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி துன்பத்தில் துணை நிற்பவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி எனது ஆலோசனைகளைக் கேட்டு நடப்பவளாக இருக்க வேண்டும்!
என் எதிர்கால மனைவி மரியாதையுள்ளவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி என் பெற்றோரிடம் அன்பு செலுத்துபவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி எங்கள் குழந்தைகளை முகம் சுழிக்காமல் பார்த்துக் கொள்பவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி அதிக ஆடம்பரத்தை விரும்பாதவளாக இருக்க வேண்டும்!
என் எதிர்கால மனைவி எனக்கு விருப்பான உணவினைத் தனது கையினால் சமையல் செய்து தருபவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி எங்கள் குடும்பத்தினரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவளாக இருக்க
வேண்டும்! என் எதிர்கால மனைவி மற்றவர்களைக் குறை கூறாதவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி சுறுசுறுப்பானவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி தூய தமிழ் வார்த்தைகள் பேசுபவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி இன்முகத்துடன் உறவினர்களை வரவேற்று உபசரிப்பவளாக இருக்க வேண்டும்!
என் எதிர்கால மனைவி மனம் விட்டுப் பேசக் கூடியவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி நகைச்சுவை உணர்வு உடையவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி எங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி ஆரோக்கியமானவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி இறை நம்பிக்கை உடையவளாக இருக்க வேண்டும்! என் எதிர்கால மனைவி குடும்பத்தில் ஏற்படும் சிறிய மன வருத்தங்களை மறந்து குடும்பத்தினை ஒற்றுமையுடன் வழி நடத்துபவளாக இருக்க வேண்டும்!