காதல் கனவு
காதல் கனவு
விழாக் கோலம் பூணும் ஊரில்
உலா வந்தாள் தேவதை தேரில்
நிலா போல ஒளிர்ந்தாள் இரவில் வதம் செய்து போனாள் மனதில்
நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ
கரை தொடும் தூரம் தானே
காதல் சுமக்கும் கருவும் வீணோ
இறுதி இல்லாக் கரையை மனது உறுதி ஆக விரும்புதே பெண்ணே மறதி எனக்குள் வரும் முன்பே மனதால் கலந்திட வாடி பெண்ணே
இமை இரண்டும் மூடாக் கண்ணில் சுமை போல இரவுப் பொழுது
எமை நோக்கி அவளும் வந்திட இரவும் இங்கே இல்லாது போனது
அதிகாலைப் பரிதி அழகாய் உதிக்க அம்மா குரலோ அடேய்னு அழைக்க அவளின் காதல் அப்படியே நிற்க கனவுக் காதல் கண்ணீர் தந்தது.