அம்மா
அம்மா
கோவில் என்னும் கருவறையில் கருவாக சுமந்தவளே/
பத்து மாதம் சுமப்பதை சுகமாக நினைத்தவளே /
நிமிடத்திற்கு நிமிடம் என் வரவை எதிர் பார்த்தவளே /
என் வரவுக்காக நித்தம் தவமாய் தவம் கிடந்தவளே /
தன் உயிரை பணயம் வைத்து என்னுயிரை பெற்றெடுத்தவளே /
குழந்தை பருவத்தில் குறைவின்றி வளர்த்தவளே/
குறைகள் எதுவென்றாலும் நிறைவேற்றித் தருபவளே /
முழுநிலவாய் நான் வாழ அரை நிலவாக தேய்ந்தவளே /
மழலை பருவத்திலே மனங்குளிர வளர்த்தவளே /
வளரும் நிலைகள் உணர்ந்து உணர்வுகளை ஊட்டி வள
ர்த்தவளே/
பருவ வயதினிலே பக்குவமா பாதுகாத்து வளர்த்தவளே/
வறுமை வாட்டினாலும் வாடிய முகம் பார்த்து பசி தீர்த்தவளே/
தீராத சோகத்தையும் சோர்வின்றி தீர்ப்பவளே/
உன் தீவிர உழைப்பால் என்னை வீரமாக வளர்த்தவளே/
வாழும் வாழ்வில் நான் விழும் போதெல்லாம் என்னை வீறிட்டு எழச்செய்தவளே/
இந்த ஊருலகம் வியக்கும் வண்ணம் காலங்கள் முழுவதும் என்னை கன்னியமாக வளர்த்தவளே/
வாழ்வில் நான் சிகரம் தொட தொடர்ந்து கடினமாக உழைத்தவளே/
விதை கருவாக இருந்த என்னை வளர்த்து விருட்சமாக்கிய உன்னை முதுமையில் விழுதாக தாங்கி சுமப்பேனே/