STORYMIRROR

Muthukumaran Palaniappan

Classics

4  

Muthukumaran Palaniappan

Classics

வண்ணங்களின் திருவிழா ஹோலி.

வண்ணங்களின் திருவிழா ஹோலி.

1 min
326


வண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி வெண்மை நிற திரையே.


வெண்மை நிறமே பல வண்ணங்களின் உயிர் .


அதைப்போல மனிதர்களின் வண்ணமயமான தூய எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி வெண்மைக்குணம் கொண்ட மனமே.


மனமே மனிதர்களின் வண்ணமயமான வாழ்க்கைக்கு உயிர்.


வண்ணங்களால் மலருக்கு அழகு


வண்ண ஆடைகளால் மனிதனுக்கு அழகு


வண்ண வானவில்லால் வானுக்கு அழகு.


வண்ணங்களை உயிர் இல்லை ஆனால் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தூண்டும் சக்தி உண்டு.


பல வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலப்பதால் தான் ஜொலிக்கின்றன பல புதிய வண்ணங்கள் பிறக்கின்றன.


அதைப்போன்றே மனிதர்கள் வாழும் வாழ்வில் வேறுபாடு பார்க்காமல் வண்ணங்கள் போன்று ஒருவரோடு ஒருவர் உணர்வுகளையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டாள் இந்த உலகில் ஜொலிக்கலாம் வாழ்வில் உயரலாம்.


மனிதன் மனதின் வெறுமையை நீக்கி வண்ணமயமான தூய எண்ணங்களால் மனதை வசப்படுத்தி வாழும் வாழ்க்கையை மனிதநேயத்தோடு வாழ கற்றுத்தரும் தினமே இன்று கொண்டாடப்படும் வண்ணங்களின் திருவிழா கோலி பண்டிகை. அனைவருக்கும் எனது கோலி பண்டிகை வாழ்த்துக்கள்.


Rate this content
Log in

Similar tamil poem from Classics