புறப்படு தலைவி
புறப்படு தலைவி
ஒழுக்கம் அது
தகர்ந்திடாத சமூகம்/
அன்பு அது
கரைந்திடாத சமூகம்/
குரல்கள் என்றும்
ஓய்ந்திடாத சமூகம்/
கண்ணகிகள் என்றும்
வீழ்ந்திடாத சமூகம்/
இல்லறம் என்றும்
சாய்ந்திடாத சமூகம்/
நல்லறம் என்றும்
காய்ந்திடாத சமூகம்/
பெண்ணவள் என்று
வீழ்த்திடாத சமூகம்/
பேதை அவள் என்று
தூற்றிடாத சமூகம்/
ஆண் தன் கர்வமும்
நான் என்னும் எண்ணமும்/
அனைவருமிங்கே உயிரென
ஏற்கும் உன்னத சமூகம்/
உருவாக்கிட புறப்படு தலைவி/
கரைந்துவிடும்
கால வளையல் அல்ல/
கரை சேர விரும்பும்
ஆழ வரம்பு அவள்
-