STORYMIRROR

Binth Fauzar

Action Classics Inspirational

5  

Binth Fauzar

Action Classics Inspirational

🍃எனக்கான உண்மை🍃

🍃எனக்கான உண்மை🍃

1 min
499


____________________


உலகம் கண்டேன் 

என் கண்கள் வியந்திடவே-

தாயே உன் முகம் பார்த்தேன் உலகையே அதனுள் கண்டேன்.....!


பாசம் கொண்ட 

பலரைப் பார்த்தேன் -

எனக்கெனவே நேசம் 

கொண்ட ஒரு ஜீவன் 

நீ மட்டுமென அறிந்தேன்....!


உனக்குப் பசித்தாலும் -

எனக்குப் பசித்துவிடாமல் 

கவனமாய் இருப்பாய்...!

 உன் இதயமோ ஆயிரம் வேதனைகள் சுமக்க 

என் கண்கள் கலங்கி 

விடக்கூடாதே என்பதில் 

அவ்வளவு நுணுக்கம்....!


எனுள்ளம் நனைகிறதே-

நான் கண்தூங்க எனக்காய் எத்தனை இரவுகளை நீ தொலைத்தாய்...!

உனக்காக நான் எத்தனை 

இரவுகள் என நினைக்க 

முடியாமல் நாணுகின்றேன்....!


சுடும் வெயிலும் 

கடும் குளிரும்

நடு இரவும் உன் 

இலக்கணத்தில் ஒரே வரைவிலக்கணத்தையே சொல்லும்....!


நான் பிணியில் வீழ்ந்தால் 

நீயே ஒரு வைத்தியராய்-

கூடவே ஒரு தாதியாகவும் கூட....!

என் உடல் எழும்பும் வரை உன் இதயம் தூங்கியதில்லையே...!


என் தாயே...! உனக்கென 

என்னால் எதுவும் தந்துவிடாமல் என் உயிர் இறையோனை அடைந்திடக்கூடாது....!


கரைந்துவிடுகிறேன்-இறைவா ...!

உன்னிடம் நான் கேட்பது - எனக்காய் என் தாய் ஏற்ற பிரயாத்தனங்களை பிரயோசனமாக்கிவிடும் பிள்ளையாக உன்னை சந்திக்க...!


✍Binthi Fauzar

 


Rate this content
Log in

Similar tamil poem from Action