விவசாயியின் அறிக்கை
விவசாயியின் அறிக்கை
1 min
23.7K
வானம் பார்த்த பூமியிலே நானும் ஒரு செடி வளர்த்தேன்
கொடி அரும்பி பூ பூத்து செவ்வண்ண காய் காய்ந்தால் குடி விளங்கும் என்றிருந்தேன்...கொஞ்சமோ நம்பிக்கைகள்
சூரியனால் என் உடலில் துளிர்கின்ற வியர்வையெல்லாம் வேரினில் வழியவிட்டு விளைவித்தேன் உயிர்ச்செடியை
மண்ணில் முளைத்த செடி என் கண்ணில் முளைத்தது போல் என்னில் இரவு பகல் இமையாய் தவமிருந்தேன்
விண் மழையும் இல்லாமல் வியர்வை பலன் தருமா?
தண்ணீர் தருபவருக்கு என் உயிரை நான் தருவேன்.
ஒரு துளி தண்ணீர் தருபவருக்கு என் உயிரையும் நான் தருவேன்.