சாகசம்
சாகசம்
ஒரு இதயத்தை உடையச் செய்துவிட்டு
ஒன்றுமே நடக்காததுபோல
பேசுவது ஒரு கலை
உங்களையே சார்ந்திருக்கும் ஒருவரிடம்
நீ எனக்கு யாருமே இல்லை
என உணர்த்திக்கொண்டே
உறவாடுவது ஒரு சாகசம்
ஒரு பொம்மையை நகர்த்துவதுபோல சப்தமில்லாமல் ஒருவரை நகர்த்துவது ஒரு உத்தி
எல்லாவற்றையும்
கழுவித்துடைத்தாற்போல
மறக்க முடிவது ஒரு கொடுப்பினை
இப்படியெல்லாம் திறமையாக ஒரு பிரியத்தை கையாளுகிறவர்கள்
உங்களை நோக்கி வரும் ஒரு வெறுப்பை எப்படிக் கையாளுவது எனத் தெரியாமல்
ஏன் திகைத்து நின்றுவிடுகிறீர்கள்?