Tamizh muhil Prakasam

Tragedy Inspirational

4  

Tamizh muhil Prakasam

Tragedy Inspirational

ஆண் - பெண் சமத்துவம்

ஆண் - பெண் சமத்துவம்

1 min
2.1K


கருக்கலைப்பு சட்ட விரோதமாக

சிசுக் கொலையை கையிலெடுத்தீர் -

கயவரே ! அதிலும் தப்பிப் பிழைத்து

மொட்டாய் இருக்கையிலேயே

கருக்கிடவும் தயங்காமல்

செந்நாய்க் கூட்டமென சுற்றித் திரிகிறீர் !

கல்வியில் பாகுபாடு

பணியிடத்தில் வேறுபாடு

இருமனம் இணையும் திருமணத்திலோ

வரதட்சணை - சமத்துவமின்மை என

ஆயிரமாயிரம் கோளாறு !

பெண்ணாய் பிறந்தவள்

சந்திக்கும் -ஆயிரமாயிரம்

தடைக்கற்களை எல்லாம்

படிக்கற்களாய் மாற்றி

முன்னேற்றப் பாதையில் நடைபோட

துணை நிற்கவே - சமத்துவ சமுதாயம்

முகிழ்த்திடும் நன்னாளில்

அழகாகும் இந் நானிலமே !


Rate this content
Log in