STORYMIRROR

Shakthi Shri K B

Drama Romance Tragedy

5  

Shakthi Shri K B

Drama Romance Tragedy

உயிர் மெய் ஆனது

உயிர் மெய் ஆனது

1 min
480

அவனின் கம்பிரமான பேச்சும் நடையும் மிக துல்லியமாக இருக்கும்,

ஆவலுடன் நான் காத்திருக்கும் கடற்கரைக்கு விரைந்து வருவான் என்னை காண,

இனிமையான குரலில் நான் பாடும் பாட்டை கேட்டு ரசிப்பான் என் மன்னன் அவன்,

ஈகை மாறாத பண்பு கொண்டவன் அனைவருக்கும் உதவுவதில் கர்ணன்.


உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை,

ஊரெங்கும் ஒரே பரபரப்பு அனைத்து இடங்களும் மூடப்பட்டன,

எவரும் எதிர்பாராமல் வந்த காரோண நோய்த்தொற்று,

ஏன் இப்படி ஒரு அவலம் நிகழ வேண்டும் என்று யோசிப்பதற்குள்,

ஐந்து நொடிகளில் என் வாழ்க்கை தலை கீழாக மாறும் என அறியாது இருந்தேன்.


ஒரு குறுந்செய்தி வந்தது அலைபேசியில் மனம் ஒரு கணம் நின்றுவிட்டது.

ஓயாமல் அழ துடங்கினே வீட்டில் இருக்கும் அத்தை, மாமா இருவரும் என்னை பார்த்தனர்,


ஒளதடம் கூட வேலை செய்யவில்லை பத்து நாட்களுக்கு மேல் ஏன் காதல் கணவன்,

எஃகுவாள் கொண்டு யாரேனும் இந்த கொடிய பேரிடரை அளிக்க மாட்டார்களா என ஏங்கினேன்.


என் உயிருக்கும் மேலான என் கண்ணவரை பறிகொடுத்துவிட்டேன் இந்த கொடிய கொரோனாவிற்கு,

அன்று மட்டும் அந்த குறுந்செய்தி வரவில்லை என்றால் அவர் உயிருடன் இருந்திருந்தால்,

வாழ்க்கை மேய்த்து போயிருக்கும் ஆனால் விதியின் யுத்தியை படிக்க தவறிவிட்டேன்,

காலம் தாமதம் ஆனால் என்ன இனி வாழும் நாள் முழுவது அவரின் வரைபடத்தை பார்த்தே வாழ்ந்துவிடுவேன்!



Rate this content
Log in

Similar tamil poem from Drama