புகை நமக்கு பகை
புகை நமக்கு பகை

1 min

24.8K
புகை கக்கும் ஆலைகளே
உங்கள் புகை - அந்த
வான் வெளியையே
மறைத்து விடுகிறதே ?
வானுயர்ந்த புகைபோக்கி
காற்றில் நஞ்சையே கலந்து
உயிர்களுக்கு கேடு அளிப்பதை
உணர்ந்தும் மனித மனங்கள்
விழித்துக் கொள்ளாதது -
சுயநலம் மற்றும் பேராசையின்
வெளிப்பாடன்றி -வேறென்னவாக இருந்து விடக் கூடும்?