விவசாயிகளின் இன்றைய நிலை
விவசாயிகளின் இன்றைய நிலை
இயற்கையால் உருவான உழவும்
இன்று உருமாறி நமைவிட்டுபோகுது
செயற்கையால் உருக்குலைந்த வளமும்
இன்று இயற்கையைவிட்டு தூரம் செல்கிறது
கருக்கல் கழிந்தும் காட்டில் காவல்கிடப்போம்
தெருக்கள் தோறும் நெற்களை குவித்துவைப்போம்
சேவலை விழிப்பொலி ஆக்குவோம்
சிலவேளைகளில் சேவலுக்கே எழுப்பொலி நாமாவோம்
அன்று,
விடியலை காணாத நாளும் இல்லை
வீதியில் விளையாடா நேரமும் இல்லை
கையுறை அணிந்த கணமும் இல்லை
கைப்பேசியில் கனிந்ந மனமும் இல்லை
இன்று,
உழவு ஒரு தொழிலாய் இல்லை
உணவும் இன்று மருந்தாய் இல்லை
உழவன் இங்கு உவகையில் இல்லை
நம் உள்ளமும் அதை நினைப்பதாய் இல்லை
நாளை,
விளைவிக்க வயலுமில்லை
உழுவ எவர்க்கும் மனமுமில்லை
விவசாயம் அது அழியவுமில்லை
முதலாளிகளின் கையினின்று விடுபடவுமில்லை
முதலாளிகளின் முதல் மூளையையும் மழுக்
குமோ
முன்மதியற்றவனாயின் நம் முதுகெலும்பையும் முறிக்குமே
விளைவித்தவனால் விலை வைக்க முடியவில்லை
விதை நெல்லிற்கும் விலை கொடுக்க முடியவில்லை
அன்று போல் வீரியமான விதை நெல்லும் இன்றில்லை
இன்றுபோல் விதவிதமான நோய்களும் அன்றில்லை
அங்கக(Organic) காய்கறிகள் இன்று தனிபிரிவில்
அங்கங்கள் வலுப்பெறும் என்ற விளம்பரத்துடன்
அதை விளைவிப்பவனுக்கோ விளம்பரம் தெரியாது
அதை விதையாய் விற்பவனுக்கோ விவசாயமே தெரியாது
சட்டங்களும் இன்று சாடியதாலே
சட்டையின்றி எதிர்க்கிறான்
சாமானியனின் வாழ்விற்காய்
சாகும் வரை போராடுகிறான்
நாளைக்கான போராட்டமோ அது
நமக்கானதுமான போராட்டமே இது
ஒதுங்கி நின்றால் கோர்க்க முடியுமோ
ஒன்றுபட்டால் தீர்க்க முடியுமே
ஒன்றுபடுவோம் ஒருங்கிணைவோம்
வருங்காலம் வளம் கொழிக்கும்