ஒரு யானையின் குரல்
ஒரு யானையின் குரல்
கடவுளாக பார்க்கின்ற
உன் கண்ணால் தானா
கெளரவமிழந்து
பிச்சை எடுப்பதையும்
பார்த்து கொண்டு நிற்கின்றாய் ?!
காடுகளை உருவாக்க
தெரிந்த எனக்கா நீ
முகாம்கள் அமைத்துக் கொடுக்கிறாய்?!
நான் செல்லும் வழித்தடங்களிலா
உன் பாதைகளை நீ அமைப்பது ?!
அழகான தந்தம் கொடுத்த இறைவன் கூட
நான் உயிரோடு இருக்கும் போது அதை வெட்டமாட்டார் ஆனால் - நீ ?!
ஆறு அறிவு இருந்தும் கூட,
இந்த பூமியை
உனக்கு மட்டுமே - சொந்தமென்று கொண்டாட எப்படி மனம் வருகின்றது?