இதயமே..... இதயமே!
இதயமே..... இதயமே!


இதயமே,
என் தாயின் கருவறையில் எனக்கு முன்னே உதயமானாய்..
என் உடலுக்கு இதயமானாய்!
நான் கருவாய் உதித்தது முதல் .....
நாள் முழுவதும் எனக்காகவே துடிக்கிறாய்!
நான் விழி மூடி உறங்கினாலும்...
நீ ஒரு போதும் உறங்குவதில்லை!
கோபம் கொண்ட போதும்
அதிர்ச்சியில் உறைந்த போதும்....
துன்பத்தினால் துவண்டபோதும்.....
நீ மட்டுமே...
என் உணர்வுகளை
பங்கெடுத்துக் கொண்டாய்!
உன் அசைவு நின்று போனால்.....
என் அசைவும் நின்று போகும்!
நீ துடிக்கும் வரையில் மட்டுமே எனக்கு இந்த உலகில் அங்கீகாரம்!
நின்று போனால் என் அகங்காரம்... அலங்காரம்.... எல்லாம் அழிந்து விடும்!
சிங்காரம் சீர் கெட்டு போய்விடும்!
உனக்காக நான் என்ன செய்தேன்....?
என்ன செய்து கொண்டு இருக்கிறேன்....?
என்ன செய்வேன்?
கணக்கிட்டால்...... ஒன்றுமில்லையே!
உனக்கு இன்னலிழைத்த போதும்....
என்னை தண்டிக்காமல்....
சைகை மொழியால் சுட்டிக்காட்டுகிறாய்!
என்னால் துடிக்க முடியாது! என
ஒரு போதும் உரைத்ததில்லை!
உன்னால் முடியும் வரை துடிக்கிறாய்!
உனக்காக என்றும் நான் இருந்ததில்லை!
ஆனால் எனக்காக நீ.... நீ.... மட்டுமே இருக்கிறாய்.... என்னுள்ளே! என்னுடனேயே.... என் இறுதி வரைக்கும்!