திருவிழா
திருவிழா
என் கண்கள் கடவுளைக் காணவில்லை
என் கால்கள் கட்டுக்குள் இல்லை
என் நெஞ்சில் நெய் தீபம் ஏற்றி
என் கைகளில் பிரசாதம் ஏந்தி அவள் முகம் காண காத்திருந்தேன்
என் குலதெய்வ கோயிலில் என் காதலைக் காண
கண்டேன் சீதையை கரைந்தேன் கண்ணீரால்
என் உயிர் என்னுடன் இல்லை அவள் என்னை பிரிந்த நாள் முதல்
கண்டேன் காதலை கலைந்தேன் கலங்கினேன்
திருவிழா காண தன் குடும்பத்துடன் வந்த என் தேவதையை
தேரில் தெய்வத்தை சுற்றி வலம் வரும் காட்சி போல
என் எண்ண ஓட்டத்தில் துலைந்தேன் நான் துலைத்த என் காதலை நினைத்து!!!