நிழல்களின் நிஜம்..
நிழல்களின் நிஜம்..


அடர்ந்த காடு என்றேன்
வண்ணத்து பூச்சியின் வாழ்விடம் என்றாய்
இருண்ட வானம் என்றேன்
கார்மேக கூட்டங்கள் என்றாய்
எரிமலையின் வெப்ப மண்டலம் என்றேன்
மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய்
நீ என் வழித்துணை என்றேன்
அடி முட்டாள் பெண்ணே நான் உன் வாழ்க்கைத் துணை என்றாய்...