விருப்பம் தெரிவிக்கும் நாள்!
விருப்பம் தெரிவிக்கும் நாள்!
விருப்பமதைத் தெரிவிக்க
வாய்ப்பளிக்கும் நோக்கிலும்
விரும்பியதை அடைவதற்கு
உண்மையைத் எடுத்துரைக்க
இந்நாள் நன்னாள் பொன்னாள்!
கண்கள் மட்டும் கலந்துபேசி
களிப்புற்ற காலம் போய்
கனவுகளை வெளிக் கொணர்ந்து
கலந்து பேச வாய்ப்பளிக்கும்
இந்நாள் நன்னாள் பொன்னாள்!
ஜன்ன லோரப் பார்வையிலே
ஜொள்ளுவிட்ட காலம் போய்
நினைவுகளை வெளிப்படுத்தி
நிஜமாய் வாழ முயற்சிக்க
இந்நாள் நன்னாள் பொன்னாள்!
-align-justify">யாருந்தினாலும் முன் செல்லாமல்
பேருந்தில் தவிப்புடன் பார்த்த
ஏக்கப் பார்வைதனை விடுத்து
என்றென்றும் பார்க்க முயலும்
இந்நாள் நன்னாள் பொன்னாள்!
கோவில் குளம் திருவிழாவென
கூட்டம் கூடும் இடத்திலெல்லாம்
பரவசமாய் பார்த்த பின்னால்
நிரந்தரமாய் பார்க்க முயலும்
இந்நாள் நன்னாள் பொன்னாள்!
மனிதர் முன் மொழிந்தாலும்
கடவுளே முடிவு செய்கிறார்!
கடவுளின் முடிவும் கூட
மனிதரின் உள்ளக் கிடக்கையில்!
காதலின் தரமும் அளவுமே
ஏற்பு / மறுப்பை நிர்ணயிக்கிறது!