நெல்லான் மட்டுமே நில்லாகுவான்
நெல்லான் மட்டுமே நில்லாகுவான்
உள்ளான் இல்லான் ஆவதும்
இல்லான் உள்ளான் ஆவதும் – வியப்பன்று!
உள்ளான் கல்லானாய் இருப்பதும்
கல்லான் உள்ளானாய் இருப்பதும் – வியப்பன்று!
உள்ளான் மல்லன் ஆவதும்
மல்லன் செல்லானாய்ப் போவதும் – வியப்பன்று!
உள்ளான் இல்லானாகி
உள்ளான் கல்லானாகி
உள்ளான் மல்லனாகி
என்றாவது ஒரு நாள்
உள்ளான் இல்லானாவே
போகலாம்!
ஆனால் என்றுமே
நெல்லான் மட்டுமே நில்லாகுவான்!
பொருள்:
உள்ளான்&n
bsp; – (பொருள்) உள்ளவன்
இல்லான் – (பொருள்) இல்லாதவன்
கல்லானாய் – (கல்வி) கல்லாதவனாய்
மல்லன் – (மல்லு கட்டுபவன்)-சண்டைக்காரன்–வலிமை உடையவன்
செல்லானாய் – செல்லுபடி ஆகாதவனாய்-(நிலைத்து நிற்காதவனாய்)
இல்லானாகவே - இல்லாதவனாகவே
நெல்லான் – (நெல்லைப் படைக்கும்) விவசாயி
நில்லாகுவான் – நிலைத்து நிற்பவன் ஆவான்