STORYMIRROR

SAIRENU SHANKAR

Classics Inspirational Others

5  

SAIRENU SHANKAR

Classics Inspirational Others

கார்த்திகை விளக்கு

கார்த்திகை விளக்கு

1 min
500

ஒளிருக மணிவிளக்கு

உலகெங்கும் அணிவிளக்கு

இருளிலும் ஒளியிருக்கு - இதை

அறியவே அறிவிருக்கு


தனிவழி இருளிலும்

தானம் ஒளிவிளக்கு - பல

பிணிசேர் மனதிற்கு

தியானம் களிவிளக்கு


ஞானம் அகவிளக்கு

மன இருள் நீ விலக்கு

அன்பே ஜெகவிளக்கு

அதனால் சுகமிருக்கு


இம்மைக்கும் மறுமைக்கும்

நன்மக்களே விளக்கு

இல்லங்கள் ஒளிபெறவோ

பெண்மக்களே விளக்கு


விளக்குகள் பலவுண்டு

சிறப்புகள் அதற்குண்டு

அளப்பறியா நம்பிக்கையாய்

ஒளிரட்டும் ஒளிவிளக்கு


தாங்கியே ஒளிவீசும்

தர்மம் கைவிளக்கு

அரிதாம் ஆத்மனாம்

ஹரியே மெய்விளக்கு


முன்னைக்கும் அதுவிளக்கு

பின்னைக்கும் புதுவிளக்கு

கண்ணனே என் விளக்கு

கருணையை நீ பெருக்கு!



Rate this content
Log in

Similar tamil poem from Classics