மாய உலகம்
மாய உலகம்
🍃🍂🍃🍂🍃🍂
____________________
நாட்டம் கொண்டேன்
பல சோகங்களும் கண்டேன்...!
இமைகள் பலதும்
இரைப்பதுவும் கண்டேன்...!
அகம் தொடாது முகமன்
கூறும் நட்புகளும் கண்டேன்...!
இதயம் தொடாது சிரிக்கும்
இதழ்களும் கண்டேன்... !
நமக்காய் நாடாத பலர்
தமக்காய் நாடலும் கண்டேன்...!
போலிக்குள் கோலம்
போட்டிடும் கயவரும் கண்டேன்...!
காணும் நொடியில் காணாமலே
போவோரும் கண்டேன்...!
சினுக்கத்துள்ளே சீறிப் பாயும்
அணுக்களும் கண்டேன்...!
அலுவல் பல தொலைத்திடும்
கால்நலுவல்களும் கண்டேன்...!
சிரிக்கின்றேன்
இல்லை இல்லை
கற்றுக்கொண்ட
ேன்
சிறகடிக்கும் வயதினிலே
உள்ளத்தைப் புதைக்கவும்
உண்மைகளை மறைக்கவும்....!
சங்கம் அமைத்து சாமம் வரை
சமாதானம் பேசுகிறாயாம்...!
விடியல் கண்டதும் சாபம் போட்டு
பங்கம் சமைக்கிறாய்....!
என் சிறகொடித்து சில்லரையாக்க
நினைக்காதே...!
நிஷப்தங்களுக்குள் அலைந்து
தொலைந்து போன என் புதையல்
தேடும் பயணமிது...!?
விட்டில் பூச்சியல்ல நான்....!
விடா முயற்சிக்காரி..!
விரட்டி அடித்தாலும்
வீழும் வரை விரட்டினாலும்
பல கேலிக்கார மாந்தர் போல்
வீழ்ந்து விடுவேன் என
நினைத்தாயோ...?
விட்டில் பூச்சியல்ல நான்
விடாமுயற்சிக்காரி...!
✍ Binth Fauzar