உன்னால் முடியும்
உன்னால் முடியும்
உன்னால் முடியும்
_______________
வஞ்சிக்கும் நெஞ்சங்கள் இங்கே/
சஞ்சலம் செய்யும் முன்னே/
விண்ணை தஞ்சம் புகுந்தே/
செந்தழலாக்கிடு நீ சென்றே/
வீரங்கொண்டும் பேரம் பேசும்/
வீராப்புடனும் இதழ்கள் பேசும்/
அதிகாரம் அதன் தொனியில் வீசும்/
வென்றிடுமே அதில் செல்லாக்காசும்/
சினேகிதங்கள் சிலதும் வருத்தும்/
பொல்லாக் கதைகளும் உன்னை வதைக்கும்/
நெஞ்சுரம் உன்னை உயர்த்தும்/
உலகம் அது கண்டு வியக்கும்/
ஞாலம் இனித் தென்றலாகும்/
ஞானம் உனதே என்றாலது ஆகும்/
கனவுகள் இனி கரை சேரும்/
கடல் நுரையது விரண்டோடும்/
உதிரம் உடம்பின் சிறையாகும்/
அடிமைச்சிறை என்றும் கறையாகும்/
விரல்கள் இனி எலும்பாகும்/
உன் வீரம் தனியழகாகும்/
முடிந்துவிடவில்லை என் தோழா/
அடிகள் உன் கோலாய்/
முடியும் உன்னால் வாராய்/
மடியும் முன்னால் போராய்/
சிறகுகள் விரிக்கவா வானில்லை/
தைரியம் உனக்கு ஏனில்லை/
காரியம் முடிக்கவா நாளில்லை/
உனக்குத் தந்தவரார் எல்லை
கனவுகளை இனி பலமாக்கு/
எதிரிகளை வெறும் களையாக்கு/
தடங்களை உன் தடம் ஆக்கு/
வெற்றி வாகை அதை உனதாக்கு/
எழுந்து நீயும் நில்/
நிமிர்ந்தே நேரில் செல்/
கூர்ந்து பார்த்து சொல்/
"உன்னால் முடியும்" வெல்/