இனி எதற்கு நவீனம்...??!!!
இனி எதற்கு நவீனம்...??!!!
தழல்கள் கடந்தும் உயரம்
செல்லும் பச்சை....
கவிஞனுக்கும் காவியம்
சொல்லும் வெளி.....
நீண்டதூரக் களைப்பையும்
கட்டிப்போடும் சுனை...
நவீனத்தின் சொந்தக்காரன்
ஓய்வென்பதை
உணர்த்தும் இறக்கைகள்....
இலவசமாய் ஒட்சிசன்
தருவதாய் அடைக்கலமாகிட
சொல்லும் வருடல்.....
இங்கும் ஒரு இராஜ்யம்<
/p>
படைத்திடும் தந்திரம்
சொல்லும் வரிசை.....
சகதிதான் நான் ஆனாலும்
பட்சணம் தருவதாய் பிரமாணம்
செய்யும் சாலை.....
இல்தனை அலங்கரித்திட
இங்கிதப் பூக்களை
வாக்களிக்கும் நாணல்....
உண்மைக் களிப்பிற்கு அர்த்தம் சொல்லிடும் வாசனை....
இத்தனையும் இரகசியமாய்
செவிகளுக்குள் வருடிச் சென்றது
அந்த மழைச்சாரல்...
பதில் தந்துவிட்டேன்
இனி எதற்கு நவீனம்...??!!!