STORYMIRROR

Yasotha Rajendran

Romance Action Inspirational

4  

Yasotha Rajendran

Romance Action Inspirational

தமிழ் வித்து

தமிழ் வித்து

1 min
52

ஊறுந் தமிழினிக்கும் – அது

கூறுந் திறன் வியக்கும் !!

தீருந் தனிமை வாய்க்கும்!

மீறுங் காதலதி லுதிக்கும்!

சீரும் வீரம் பிறக்கும் – சொல்லில்

கீறும் வன்மை யிருக்கும்!

வீறு கொண் டெழுப்பும் – இளமை

பீறிட்டதிலே கிளம்பும்!

தீயிட்டதை எரித்தாலும்

போரிட்டதை அணைக்கும்!

தெவிட்டா இசையும் பிறக்கும் – அதில்

தீவினை மூழ்கி மறிக்கும்!

ஊழ்வினை பின் தொடர்ந்தாலும் – தமிழ்

சூழ்ந்தே அதை நெறிக்கும்!

வீழ்வதே யானாலும்

தூள் தூளாய் வெடித்தாலும்!

மண்ணிலே புதைத்தாலும்!

மண் முட்டி வானெட்ட

முளைத்திடும் தமிழ் வித்து...

மண் முட்டி வானெட்ட

முளைத்திடும் தமிழ் வித்து...

     இறைவா !!

யான் பிறப்பினும் இறப்பினும்

தமிழன்னையின் மடியிலே

கிடந்திடும் உயிர் வேண்டும் !!!

தருவாயா!!!!???



Rate this content
Log in

Similar tamil poem from Romance