ஒன்னும் புரியல சாமி
ஒன்னும் புரியல சாமி
ஒன்னும் புரியல சாமி
***********************************
என்ன நடக்குது ஏது நடக்குது
ஒன்னும் புரியல சாமி !!
கண்ணு முழியில நீரும் பெருகுது
ஏனுன்னு தெரியல சாமி !!
வந்தவன் போனவன்
எல்லாம் ஆடுறான்
தாங்குமா இந்த பூமி !!
கேட்டதும் பாத்ததும்
பொய்யா போச்சுதே
மெய்யெது காட்டுங்க சாமி !!
வெந்த புண்ணுல
வேலையும் பாச்சுட்டு
பல்லக் காட்டும் ஆசாமி !!
இங்க மரமில்ல, நிழலில்ல,
மழையில்ல, சோறில்ல
மண்ணா போச்சுது பூமி
வெறும் மண்ணா போச்சுது பூமி !!
தப்பு செஞ்சவேன்
நீதி சொல்லுறான் !!
சோம்பேறி பயதான்
பணத்த எண்ணுறான் !!
வாயையும் வயிறையும் எரியவச
்சு
எரிவாயு எடுக்கேன்னு
பூமிய தோண்டுறான் !!
எங்க போச்சு உன் நீதி ?!!
சாமி, எங்க போச்சு உன் நீதி ?!!
வாசக்கதவுல வருகன்னு எழுதுறான் !!
மனக்கதவ இழுத்து சாத்துறான் !!
பொய்யா பேசுறான்!!
பொய்யா சிரிக்கிறான் !!
என்ன நடிப்பிது சாமி !!
எத நம்பனும் இந்த பாவி ?!!
தாங்க முடியல தவிர்க்க முடியல
நெஞ்சுல குத்துது ஆணி !!
தேடக்கிடைக்கல, தேடிமுடிக்கல
கருண முகம் கொஞ்சம் காமி !!
உன் கருண முகம் கொஞ்சம் காமி !!
இல்ல, நிம்மதி தேடி,
உன் சரண் நாடி ,
கட்டுவேன் நானும் காவி !!
சாமி.. நானோ அப்பாவி !!
சாமி... நானோ அப்பாவி !!
********************