STORYMIRROR

Yasotha Rajendran

Abstract

3  

Yasotha Rajendran

Abstract

மண்ணாகிட வேண்டும்

மண்ணாகிட வேண்டும்

1 min
245

மண்ணாகிட வேண்டும்  

***************************************

பெண்ணியம் பேசும் சமூகம்

என்னைச் சுற்றி !

பெண்மை கருக

காய்கிறேன் தீப்பற்றி!


இது கண்ணகி மதுரை எரித்த

கோபத் தீயல்ல !

அனுமன் இலங்கையில்

வளர்த்த போர்த்தீயுமல்ல!

பல ஆண்மகன்களின் மேனிப்பசியில்

பற்றி எறியும் காமத்தீ !....


அழகாய் பிறந்து

ஒய்யாரமாய் வளர்ந்து

இளங்கவர்ச்சிச் சுளியில்

சிக்கி மூழ்கினேன்!...

மலரும் முன்னரே கருகிப்போகினேன்!


என் தேகக்குளத்தில் தன்

தாகம் தனிக்க வந்தோர்

ஏராளம்!...

என் மேனி நந்தவனத்தில்

தன் உடற்பசி ஆற்றியோர்

ஏராளம்!...


நான் தவறவிட்டது

ஒழுக்கம் அல்ல,

என் மொத்த வாழ்வை!

என்னால் கடக்கப் பட்டவைகள்

பாதைகளல்ல,

வெறும் காசால் திணிக்கப்பட்ட

மெத்தைகள் !...


காதல் வசனங்கள்

புளித்து போயிற்று !..

காமக் கவிதைகள்

நிறைந்து ஒடிற்று !...

களவி நடனம்

நித்தம் புரியலாயிற்று!...

சேர்ந்த காசுமூட்டைகள்

நான் சேர்த்த பாவமூட்டைளாயிற்று!


தாபம் தீர்ந்தவனின்

மனைவி தன்

சாபம் ஏற்கின்றேன்!...

காசெறிந்தவனின் பிள்ளைகள்

வயிறெரிய பார்கின்றேன்!..


காசிக்கு போனாலும்

கங்கையில் குளித்தாலும்

முடியாத பாவம் எனது!..

இறைவா, முடிந்தால் மன்னித்தருள்க!

இல்லை, என் பிறப்பறுத்தருள்க !

இனியொரு பிறவி

நான் எடுத்தால்,

பிறர் கால்மிதிபடும்

மண்ணாக வேண்டும் !...

பல பத்தினியரின்

சாபங்கள் மெய்யாக வேண்டும் !...


இறைவனே ....

உன்னை வேண்டுவார்,

வேண்டியது முடிந்த பின்னர்

காணிக்கை போடுவார்.

இதோ எனக்கும் அதே நிலை..

ஆயினும் உனக்கு சேர்வதோ

புண்ணியம் !..

எனக்கு சேர்வதோ பாவம்!!?..

பாவ விமோச்சனத்தை தேடி

இந்த தேவன் அடியாள் .......

*******



Rate this content
Log in

Similar tamil poem from Abstract