என் காதலை சொல்ல....!!!
என் காதலை சொல்ல....!!!
அவனை கண்டதும் காதல் கொண்டது மனது
ஏனோ மயக்கமும் கொண்டது அவன் பெயரை கேட்டதும்
முன் ஜென்ம பந்தமோ
இந்த ஜென்மத்தின் தொடக்கமோ என
அறியும் முன்பே மனம் காதலில் விழுந்ததே....!
இதனால் உண்ண பிடிக்காமல் போனது
உறங்க முடியாமல் கனவும் நனவாய் நீண்டது
தோழிகளின் பேச்சுக்களும் காதில் விழாமல் ஆனது
நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது
அவனிடத்திலும் மாற்றம் உண்டானதா என
அறிய மனம் ஆவல் தோன்றியது
எங்கே நான் கேட்டு அவன் இல்லை என
சொல்லி விடுவானோ என பயமும் வந்தது
இந்த குழப்பமும் மனதிற்கு மகிழ்வையே தந்தது...
சொல்லாமலே மனதிற்குள் இருக்கும் காதல்
அவன் என்று தன்னை பார்ப்பான்
பார்த்தும் காதல் கொள்வானா
அக் காதலை மௌனமாய் உரைப்பானா
அல்ல வார்த்தைகளால் மொழிவானா என
கற்பனைகள் பல தோன்ற காத்துக் கொண்டிருக்கிறேன்
அவன் காதல் சொன்ன மறு நொடியே
என் காதலை சொல்ல...!!