வரமும் சாபமும்
வரமும் சாபமும்


நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நாம் விட்டுவிடவே முடியாத ஒரு விருப்பம் நிச்சயமாக இருக்கும். எதன் பொருட்டும் விட்டுவிடவேக் கூடாத ஆத்மார்த்தமான அந்த விருப்பம் அல்லது விஷயத்துக்கு முன்னால் மற்ற எல்லாமே இரண்டாம் பட்சம்தான். என்ன விலைக்கொடுத்தாவது நிறைவேற்றிக்கொள்கிற அந்த சின்னச் சின்ன ஆசைகள் தருகிற புன்னகைக்காகத்தான் நாம் இங்கிருக்கிறோம் இல்லையா?
அப்படியான விருப்பத்தை, ஆசையை, தீவிரத்தை ஒரு காதல் உடைத்துப்போடுகிறது, சுக்குநூறாக்குகிறது. நிமிடங்கள், நாட்கள், மாதங்களென நேர வரையரைகளெல்லாம் காதலுக்கு ஒரு பொருட்டேயல்ல. தேடித் தேடி நிறைவேற்றிக்கொண்டிருந்த விருப்பத்தை ஒரு குறுகியகால காதல் மொத்தமாக இல்லாமலாக்கிவிட்டு அதுவும் காணாமற்போய்விடுகிறது.
ஆனால் மனம் இப்போது எதற்காக கிடந்து அல்லாடுமென நினைக்கிறீர்கள்? தான் வேட்கையோடுத் தேடிச்சேர்த்த விருப்பங்கள் உடைந்து போனதற்கா அல்லது நேற்றைக்குத்தான் பூத்த காதல் உதிர்ந்துவிட்டதற்காகவா? சர்வ நிச்சயமாக நேற்று பூத்துதிர்ந்த காதலுக்காகத்தான். இப்போது காதலுக்கு முன்னால் மற்ற 'எல்லாமே' இரண்டாம் பட்சமாகிறது. காதலை போன்றதான வரமும் சாபமும் வேறில்லை.
Can a love be faked? என்ற கேள்விக்கு கன்னத்திலறைந்து பதில் சொல்கிறது காலம்