பணம்
பணம்
ஒரு சாண் உணவிற்காக
ஊர் விட்டு
பிழைப்பு தேடி
வந்தவரெல்லாம் எறும்புபோல
சாரைசரையாய்
சொந்தஊர்தேடி
காலாற நடந்து
செல்லும் அவலம்
காண நேர்ந்த போது
தனிமனிதனுக்கு
உணவில்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம்
பாடல் வரிகள்
காதுகளில் எதிரொலிக்க
பணப்பெட்டிகள் எல்லாம்
பதவிசாய் பதுங்கிவிட
இருக்க பாதுகாப்பாய் இடம்தேடி
கண்டுபிடித்து செல்ல
வலைதளத்தில் தேடிய வரலாறு
கனவில் ஊஞ்சலாட
அவனன்றி ஓர் அணுவும்
அசையாது பாடல்
காதுகளில் ஒலித்திட
தூரத்து மசூதியில்
வெள்ளை புறாக்கள்
கிறித்துவ தேவாலய
வெள்ளைப்புறாக்களோடு
கைகோர்த்து இந்திய நாடு
என்னுடைய வீடு
என அழுத்தி பாடி பறந்தன!