புயலின் முத்தம்.
புயலின் முத்தம்.
புல்தொட்டு பேசும் காற்று
புயலோடு புணைந்ததென்ன?
நெல்விளையும் புவிமேலே
பொல்லாத கோபமென்ன...???
கிழக்கிலிருந்து நித்தம் வரும்
விளக்கொளி அன்று வரவில்லை,
கிழித்தெறிந்த காற்றின் கிறக்கதால்
மரங்கள் கொண்ட மயக்கம் கண்டேன்!
வீட்டின்மேல் வீழ்ந்த வீச்சே
ஓட்டின்மீது ஆடிய ஆட்டமென்ன?
ஏழையின்மீது இயற்கையின் கோபமோ?
பேழைநீள வீட்டினுள் பெரும் சோகமோ?
குடிசை வீட்டு கூறையெல்லாம்
குப்புற கவிழ்ந்துடுச்சு
அடிச்ச காத்தோட எங்க
ஆடையும் ஓடிடுச்சு..
முடியாத என் ஆத்தா
முதுகு வலியோட வந்து
கடைசியா வச்ச மரம்
காலமாகி போய்டுச்சு...
இப்ப பொறந்த
என் பேத்தி
தப்பு என்ன செஞ்சாளோ
தங்கம் சேர்த்து வைக்கவில்ல
தங்க திங்க ஏதுமில்ல..!!
எழுத படிக்க தெரியவில்ல,
தொழுத தெய்வம் துணையுமில்ல
வருபவரெல்லாம் தருபவரென்று
வழிபார்த்தே விழி சோர்ந்துடுச்சு
சாலையோர சோலைகள் சாஞ்சுடுச்சு
காலைமாலை கையேந்த விட்டுடுச்சு...
அன்று வந்தது இறுதியாய் மின்னும் (மின்சாரம்)
அரசு தரவில்லை அதன்பின் இன்னும்.
கஜா புயல் கிராமம் வந்து
கசக்கி தூக்கி எறிஞ்சுடுச்சு,
கருனையற்ற காற்றால இங்க
கணக்கில்லா உயிர் போச்சு.
காத்திருக்கிறோம் எங்கள்
கவலைகள் முற்றுபெருமென்று!!!
கவிதையும் முடியவில்லை எம்
கவலைபோல் தொடர்கிறது...