நான் உன் துயரம்
நான் உன் துயரம்

1 min

24.2K
எனக்குத் தெரியும்
நீ என்னால் காயமுறுகிறாய்,
நான் உன் துயரம்,
எந்த நல்லவைகளையும் உனக்களிக்கத் தெரியாதெனக்கு,
சொல்லாமல் போய்விடுவேன்.
ஆயினும் ஏன்
எல்லா முறையும்
வழியிடம் இன்றி போனபோதெல்லாம்
மீண்டும் மீண்டும்
உன்னிடம் வரும் என்னை
அனுமதித்துக் கொண்டே இருக்கிறாய்?
நான் குற்றஉணர்ச்சி கொள்ளவேண்டுமென்றா?
''இல்லை!
சிறுபொழுதே எனினும்
உன்னோடு கடக்கும் இந்த ஆனந்தத்திற்கான
சுயநலம்.
மனவெளியில் காதல் பலரூபமடி''