பெண்சிசுவைக் காப்போம்!
பெண்சிசுவைக் காப்போம்!
பால் மணம் மாறாத வயது….
பக்குவம் தெரியாத குழந்தை!
திருமணம் என்றால் என்ன? தெரியாத மழலைக்கு
குழந்தை திருமணம்!
தன் வேலையை தானே செய்யத் தெரியாதவள்
குடும்பத்தின் வேலைகளைச் செய்தாள்!
கணவன் இறந்துவிட்டால் மனைவி விதவை
மறுமணம் கிடையாது…. வெள்ளை ஆடையுடுத்தி
வீட்டுக்குள்ளே சிறைவாசம்!
சதி! உடன்கட்டை ஏறுதல்…..
நேந்து விட்ட விலங்குகளாய் பூச்சூடி பொட்டு வைத்து
தேவதாசி முறை!
அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு? பட்டம் எதற்கு?
பெண் ஒரு வேலைக்காரி…
பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒரு ஜீவன்( இயந்திரம்)
ஆண்பிள்ளை படித்து வேலைக்குப் போனால்
குடும்ப பாரம் குறையும்! நமக்கு சம்பாதித்து தருவான்!
பெண் படித்தால் வேறு வீட்டிற்கு போவாள்!
நமக்கு என்ன செய்திடுவாள
்?
பெண் படித்தால் குடும்ப பாரம் கூடும்!
படிப்புக்கு ஏற்ற மாப்பிள்ளை பார்க்கக்கூடும்
பதவிக்கு ஏற்ற சீர் செய்ய நேரும்!
வரனுக்கு ஏற்ற வரதட்சிணை வேண்டுமல்லவா!
ஏன்? பிறப்பது ஆண் பிள்ளை யென்றால்
1000 வாட் பல்பு!
பெண் என்றால் ஃபியூஸ் போன பல்பு!
சீர் செய்தே சோர்ந்து போகணுமே!
ஆணுக்குத்தானே இங்கு தட்சிணை!
வளர்ந்ததும் ஆண் பிள்ளை கான்வெண்ட் பள்ளிக்கு
பெண் அரசு பள்ளியில்… இல்லை ஆயா வேலையில்!
காலங்கள் மாறிவிட்டது!
சமூகம் வளர்ந்து விட்ட நிலையிலும்…
ஆணுக்கு நிகர் பெண் என்னும் சூழலிலும்….
எங்கோ ஓர் இடத்தில் இன்னும் வேறுபாடு
இருக்கத்தான் செய்கிறது!
இறைவா! என்று உடையும் எங்களுக்கு
பூட்டப்படும் கை விலங்குகள்!
காட்டப்படும் அநீதிகள்!