STORYMIRROR

Siva Kamal

Tragedy

5  

Siva Kamal

Tragedy

பேசும் கிளி

பேசும் கிளி

1 min
647

ஒரு கிளி 

பேசும் கிளியாவதுதான்

அதன் வாழ்வின் பெரும் துயரம்


பேசும் கிளிகள்

பேசிக்கொண்டேயிருக்கவேண்டும்

ஒரு நாள் அது பேசத் தவறினாலும்

அதை யாரும்

கிளி என்று ஒத்துக்கொள்ள மாட்டார்கள்


கிளிக்கென இயற்கையில்

ஆயிரம் சிறப்புகள் உண்டு

கிளி நேர்த்தியாகப் பறக்கும்

கிளியின் குரல் கிளர்ச்சியூட்டுது

கிளியின் நிறம் வசீகரமானது

கிளி தன் அலகினால்

பழங்களை கொறிப்பதை

நாளெல்லாம் பார்க்கலாம்


ஆனால்

ஒரு கிளி பேசக்கற்றுக்கொண்டால்

இவை அனைத்தும் மறந்துபோகும்

பேசுவது ஒன்றே கிளியின் இயல்பு என 

பேசும் கிளிகள் நம்பவைக்கப்படுகிறன


கிளிக்கும் என்றாவது ஒருநாள்

தொண்டை கட்டிக்கொள்ளும்

எதையோ நினைந்து மனமுடைந்து

கிளிக்கு வழக்கமாகப் பேசும் வார்த்தைகள்

மறந்து போகும்

தன் சிறகுகளில் ஒன்று

வெட்டப்பட்ட வருத்தத்தில்

இனி யாரிடமும் ஒரு வார்த்தை பேச

வேண்டாமென

வீம்பாக இருந்துவிடும்


இந்த உலகம் அதை ஏற்காது

ஒரு போதும் அதை மன்னிக்காது

பேசும் கிளிகள் 

பேச முடியாமல் தடுமாறுவது

அவை பறக்க முடியாமல் போவதைவிட

அவலமானது


நானும் ஒரு பேசும் கிளியான பிறகு

மனம் கலங்கி என் சொற்கள்

உறையும் பொழுதுகளில்

எனக்கு எந்தத் தோளில் அமர்வது

என்று தெரியவில்லை


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy