Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

CHANDRA KALA.K

Tragedy

5.0  

CHANDRA KALA.K

Tragedy

ஒண்டி மகள்

ஒண்டி மகள்

1 min
483


அழுதாலும் துடித்தாலும் உன் ஆத்தாளும்;

பெத்தால் ஆறு மகள்_என்ன நினைத்தாலோ?

உன்தாய்க்கு நீ ஓர் மகள்

அண்ணன்தம்பி எத்தனை என்ன?_நீ அழுதால்

ஓடிவர வேணுமென்று நினைக்கலயே

ஒத்தையிலே நிக்கிறப்போ_ உனக்காக ஓடிவர

அக்கா தங்கை உனக்கும் இல்லை_உன்னைப் போலே

என்னையும் பெற்றாய் _ உனக்கு எப்பவும் தோணலையோ

ஆலமரம் நிழலைப் போல எனக்கோரு நிழல் வேணுமென்று

அம்மா இல்லையென்றாலும் என் சித்தி வருவாலென்று

எனக்குச் சொல்ல ஆளுமில்லை_வழி வருவாரென

வந்தவரெல்லாம் சொந்தம் சொல்ல

பாவி மனம் ஏங்குகிறது அந்த ஒத்த சொல் வார்த்தைக்காக

நான் இருக்க கலங்கலாமோ என் அக்கா மகளே என்று_இன்னும்

எத்தனை நாள் ஏங்குவேனோ_ என்

நிலைமை இது தானோ?

பாவிமனதை துடிக்க வைத்தாய்

பாவமென்று தோணலையோ_ நீ செய்த

பாவத்திற்குத்தான் பாதியிலே சென்றாயோ......?

இத்தனையும் நான் சொன்னேன்_ என்

மகள் நிலையும் இதுதானோ?

மாறிவரும் உலகத்திலே மாறுகிறது எல்லாமே!

ஏன் இந்த பித்து மட்டும் மாறவில்லை தோணலையே......


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy