STORYMIRROR

Siva Kamal

Romance Tragedy Classics

5  

Siva Kamal

Romance Tragedy Classics

ஒத்ததிர்வு

ஒத்ததிர்வு

1 min
111

ஒரு நல்ல காதல் தன்னை அறிவிக்க மட்டுமே செய்யும். கெஞ்சிக்கொண்டிருக்காது. 

அஃதோர் ஒத்ததிர்வு. நான் என்னைத் தெரிவித்துவிட்டேன் நீயும் என்னைப்போலவே உணர்ந்தாயானால் வா எனும் அழைப்பு. 


இல்லை என்று மறுப்பதால் அது அவமானப்படுத்துதல் ஆகாது. ஏற்றுக்கொண்டால் என்ன மரியாதை அளிக்கப்படுமோ அதே மரியாதை வேண்டாம் என்று மறுக்கும் போதும் அளிக்கப்படவேண்டும். அது பண்பு.

அன்பெப்போதும் ஒருவருக்கொருவர் ஒன்றுசேர்ந்த நிகழ்வு. அதனைக் கெஞ்சியோ மிரட்டியோ பெறமுடியாது. பெற்றால் அது அன்பாக இராது.


Rate this content
Log in

Similar tamil poem from Romance