உனக்குத் தெரியும்
உனக்குத் தெரியும்


காத்திருப்பேன் என்று
உனக்குத் தெரியும்
நினைத்துக்கொண்டிருப்பேன் என்று
உனக்குத் தெரியும்
கவலைப்படுவேன் என்று
உனக்குத் தெரியும்
பரிதவிப்பேன் என்று
உனக்குத் தெரியும்
அதனால் என்ன
எனக்குத் தெரியும்
வழக்கம்போல இன்றும் நான்
உன்னால்
கைவிடப்படுவேன் என