மழைக்காலம்
மழைக்காலம்
மண்ணுக்கே சவால் விட்டு
கருமேகங்கள் - ஒன்றோடு
ஒன்றாய் இணைந்து
முத்துக்களாய் மழைத்துளிகள்
மண்ணை தாக்க
கதறி அழுத மண்ணோ
வாசனையை வீச - அதை
சுவாசித்த சிலையாக நிற்கும்
மரங்களும் - அலைபோல்
ஆடிக்கொண்டிருக்கும்
செடி, கொடிகளும் - அது
காற்றில் பரவி மெய் சிலிர்க்க
குளிர் தென்றலாய் வீசியதை
பார்த்த பூக்கள் புன்னகையிட
மங்கைவள் வருவதை கண்டு
பெருமூச்சு விட்டது .....
பூக்களை பறிக்க சென்ற கைகள்
மங்கையை கண்டு வியப்பில்
இது ஒரு மழைக்காலம் ...........!!!