எவ்வளவு நாள்
எவ்வளவு நாள்


இன்னும் எவ்வளவு நாள்
இருப்பேன் என்று தெரியவில்லை
இப்படி சொல்லிக்கொண்டே
இவ்வளவு நாள் இருந்துவிட்டேன்
நாளை காலை
என் உரையாடல் பெட்டியில்
நீண்ட நேரம் online காட்டவில்லை எனில் பதட்டமடையாதே
சில நாட்கள் அதிகம் தூங்கிவிடுகிறேன்
என்பதைத்தவிர
அது நீ பயத்துடன்
எதிர் நோக்கியிருக்கும் நாளல்ல