STORYMIRROR

Uma Subramanian

Tragedy

5  

Uma Subramanian

Tragedy

சிந்தையில் கொள்வோம்

சிந்தையில் கொள்வோம்

1 min
59

அறிவியல்…

ஒளி தந்து… இருள் அகற்றியது மின் விளக்கு!

ஓலி தந்து உலகை ஒன்றிணைத்தது தொலைபேசி!

உலகை வரவேற்பறைக்கு கொண்டு வந்தது தொலைக்காட்சி!

உலக அறிவை உள்ளங்கையில் தந்தது இன்டர்நெட்!

உலகை வலம் வரச்செய்தன போக்குவரத்து சாதனங்கள்!

உழைப்பைக் குறைத்து உல்லாச வாழ்வை தந்தன எந்திரங்கள்!

கண்டம் தாண்டி அண்டத்தையே ஆள்கிறது கணினி!

ஆண்டம் தாண்டி ஆகாயத்தை ஆள்கிறது செயற்கைக்கோள்!

ஆழ்கடலின் ஆழம் பார்க்க உதவின ரேடார்!

ஆடையில்லா மனிதனை… 

ஆடைக்கட்டி அழகுப் பார்த்தது நெசவு எந்திரம்!

பாரில் உள்ளோரின் பசியைப் போக்கியது பௌமைப் புரட்சி!

ஓருநாள் சமைத்ததை ஒரு வாரத்திற்கு பதப்படுத்துவது ஃபிரிட்ஜ்!

அக்னி வெயிலையும் அண்டார்டிக்காவாய் மாற்றுவது ஏ.சி!

உட்கார்ந்தே ஒரே ஒரு பட்டனால் உலகை இயக்கும் ரிமோட்!

கட்டளைக்கு கீழ்ப்படிய ரோபோ!

உள்ளேயிருப்பது ஆணா? பெண்னா? 

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை!

 கண்டம் விட்டு கண்டம் காணொலியின் மூலம் வைத்தியம்!

உள்ளுறுப்புகளை ஆய்தல்! அழிந்து போகும் செல்களைப் புதுப்பித்தல்!

அறுவடை எந்திரம்! பூச்சிக் கொல்லி மருந்துகள்!

உரங்கள் எதைச் சொல்ல? எதை விட?

திரும்பும் திசையெங்கும் அறிவியல்!

அறிவியல் அண்டத்தை மட்டுமல்ல!

நம் அங்கத்தையும் ஆள்கிறது!

அறிவியலின்றி அணுவும் அசையாது!

அதே சமயம்…. அறிவியல் சிந்திய கழிவுகள்

அண்டத்தில் குவிந்து…. ஆழ்கடலில் மிதந்து…

உலகை உலுக்கும் பெரும் காலனாய் மாறியிருக்கிறது!

அதுவே வெப்பமயமாதல் என்னும் வடிவில் வந்திருக்கிறது!

அறிவியலை அளவாய்ப் பயன் படுத்துவோம்!

சிதறிக் கிடக்கும் நெகிழிகளை சிந்தையில் கொள்வோம்!

பதறித் துடிக்கும் பிஞ்சு உள்ளங்களை மனதில் வைத்து…

நாம் பெற்ற வளங்களை நம் பிள்ளைகள் பெற வழி வகுப்போம்!


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy