STORYMIRROR

Raja SaRa

Tragedy

5  

Raja SaRa

Tragedy

திருநங்கை

திருநங்கை

1 min
489

                                                             

இயற்கையின் சதி

கருவிலே கலையாது

மெய்யிலே ஆணும்

உள்ளத்திலே பெண்ணுமாய்

திருத்தப்பட்டு திணறுகிறோம்

திருநங்கையாகிய நாங்கள்.

திரும்பிய இடமெல்லாம்

ரணமாகும் மனம்

தினந்தோறும் மனந்தேடும்

மரணம்- விதைத்தவனும்,

வினளநிலமும் களையாய்

கண்டதால் கரைந்தோடிய

கனவோடு கலவி

கைப்பாவையாகினோம் நாங்கள்

கோள்களுடனும் தானியங்களுடனும்

பட்டத்தை பகிர்ந்தோம்

பசிக்கும் வயிற்றுக்கு

கைத்தட்டலை பதித்தோம்

உழைக்க மனமுண்டு

உதவ யாருமில்லை

உணர்வை உணரவுமில்லை

இப்படிக்கு

உறவற்று புதுஉணர்பெற்ற

நாங்கள்


Rate this content
Log in

More tamil poem from Raja SaRa

Similar tamil poem from Tragedy