அவன் ஒரு பிச்சைகாரன்
அவன் ஒரு பிச்சைகாரன்
உற்றார் உறவினர் யாருமில்லை
சுற்றம் இவனை இழித்தேசும்
சற்றே வாழும் சனியன் இவன்
நித்திரை தான் காண
நிரந்தரமாய் இடமில்லை
பெற்றோர் பிள்ளைகள் பேணாதவன்
கால் வயிற்று கஞ்சிக்கு
காக்கை போல் கரைவான்
ஊர் செல்லும் சாலையில்
ஆயிரம் வாகனங்கள் கண்டு
நொடிக்கு நூறுமுறை
“அம்மா” என்று அழைப்பான்
சோற்றுக்காக