வானம் நோக்கி
வானம் நோக்கி
சிறகுகள் விரிக்கிறேன்
கட்டுகள் களைந்து காற்றாய் பறக்கிறேன்
மேலே பறக்கிறேன் - இன்னும் மேலே
புவிஈர்ப்பு விசையை எதிர்த்து
கடுமையான காற்றழுத்தத்தை எதிர்த்து
மேலே பறக்கிறேன் - இன்னும் மேலே
நான் அடைந்து கிடந்த
காங்கிரீட் காடுகள் காணாமல் போக
இமையம் என் காலுக்கு கீழே மறைய
வளிமண்டலத்தின் விளிம்பிற்கே பறக்கிறேன்
பூமியை கொஞ்சம்
வெளியில் இருந்து ரசித்து வர
கொஞ்சம் அந்த செல்ல நிலவை தொட்டு வர
அந்த வடை சுடும் பாட்டியை பார்த்து வர
மின்னும் நட்சத்திரங்களை அள்ளி வர
என்றும் நான் மொட்டை மாடியில் படுத்து
அண்ணாந்து பார்க்கும் வானம் நோக்கி
ஒரு பயணம்