என் அழகிய இராட்சசி
என் அழகிய இராட்சசி
குட்டி குழந்தை நீ
இளம் ரோஜா மொட்டின் ஸ்பரிசம் நீ
என் தலை சுற்ற வைத்து
விழி பிதுங்க வைத்து
ஆட்டிப் படைக்கும் அழகிய இராட்சசி நீ
உன் கருவிளிகள்
என் கனவுகளை கிரங்க வைக்க
255, 255, 255, 0);">உன் மேல் இதழ்
என் காலை பொழுதை விழிக்க வைக்க
உன் காரிருள் கூந்தலிலோ
என்னை தொலைத்து தேட வைக்க
காரியக்காரி நீ அடி
என் ஜென்மங்களை எழுதி வாங்கி
உன் காதல் அடிமை ஆக்கிய
கொடுமைக்காரி