2020-முதல் -2021
2020-முதல் -2021
1. தொலைவாய் கொரானாவே!
கொரானாவால் நிரம்பி வழிந்த
இருபது இருபதே!
கொடுமை என்னவெனில்
கொரானா இன்னும் இங்கிருப்பதே!
அனுப்பித் தொலை கொரானா
அரக்கனை உடனே!
அந்த பிரபஞ்சத்திற்கு
அப்பாலுக்கும் அப்பால்!
2. துரத்தியடிப்போம்!
மது அரக்கன்
*குப்பை உணவு
வறுமை லஞ்சம்
ஜாதி மதம்
பாலியல் வன்முறை
இவற்றோடு கொரானாவும்..
இருபது இருபதே
கவலைப் படாதே
துரத்தியடிப்போம்
இருபது இருபத்தியொன்றில்
அனைத்தையும்!
*junk food
3. துரத்த வரும் ‘வேக்சின்’!
அலுவலக வேலையை
வீட்டில் செய்தார்கள்!
வேலையின்மையால்
வீட்டில் இருந்தார்கள்!
பள்ளி செல்லாமல்
வீட்டிலிருந்து காணொளி!
ஏனெனில்
வெளியே கொரனா - இதோ
துரத்த வருது ‘வேக்சின்’!