கலங்கரைதீபம்
கலங்கரைதீபம்


சில காலம் பொற்காலம்
சில காலம் கார்காலம்
பொன்னின் ஒளியை கார்கால இருள் மறைத்திடுமோ?
அவள் இறந்தநாள் அப்படித்தான் நினைத்தேன்
அடுத்தநாள்அவள் நினைவொளி
மழைநடுவே மின்னலாய்
தன் கிரணங்களை விரிக்க
மரணம் நம்மைப் பிரிப்பதில்லை
மனங்கள் மரணத்துடன் மறைவதில்லை
கோர்த்த கைகள் பிரிவதில்லை
பயணங்கள் மரணத்துடன் முடிவதில்லை
என்கைகோர்த்து இன்றும்
என்னுள் பயணித்துக் கொண்டிருக்கிறாள்
அவளை நான் இழக்க மாட்டேன்
அவள்கையை விடமாட்டேன்
நிலவின் ஒளியாய் அவள் நினைவொளி
கார்த்திகைதீபம் கார்காலத்தின் கட்டாயம்
என்னை வழி நடத்தும் கலங்கரைதீபம்