அறிவுப் பெட்டகம்
அறிவுப் பெட்டகம்


அடுப்பங்கரையில், அருகே குளிர்சாதனம்
வெப்பமும் தண்மையுமாய் இயற்பியல்
ஆங்காங்கே சமையலில் அள்ளித் தெளிக்கும் ரசாயனம்
உணவருந்தும் மக்களைத் தாக்க
மருந்தாய்த் தெளிக்கும் ரசாயனம்
ஊர்ந்துவரும் பூச்சிகளையும் தாக்க
உள்ளேயும் வெளியேயும் தாக்கும் ரசாயனவியல்
என் உள்ளத்தையும் தாக்கும்
அடுத்த அறையில் அன்புமகனுடன் போர்
கண்ணைக்கட்டும் கணிதவியல்
அவன்மட்டுமா
பால்காரனும் பலசரக்குக் காரனும்
படையெடுக்கும் பலப்பல 'காரன்'களும்
போதிக்கும் எண்கணிதம் என் கணிதம்
தோட்டத்தில் தோண்டித் தோண்டியும்
தாவரவியல் தென்படவில்லை
மாடித் தோட்டத்தின் தாவரவியல்
மண்டையில் ஏறவில்லை
பாய்ந்து தாக்கியும் மின்சாரம்
தன்னியலையும் ம் கற்பிக்கவில்லை
என்னைச் சுற்றிலும் எங்கும் அறிவியல்
எதையும் கற்காத அறிவுப் பெட்டகம் நான்