இக்கரைப் பச்சை
இக்கரைப் பச்சை


என் மண்ணின் கலாச்சாரம் என்னவென்று
அந்நிய மண்ணில் உணர்ந்தேன்
என் நாட்டு வரலாற்றின் பெருமை
அந்நிய நாட்டுப் பயணத்தில் அறிந்தேன்
என் மக்களின் பண்பாட்டை
அயல்நாட்டு மக்கள் புகழக் கண்டேன்
தன் வீட்டின் அருமை தனக்கே தெரியாது
அடுத்தவர் சொல்ல அதிகரிக்கும்
உன்னை அறிவதே உயர்வென்று
என்னை உணர்த்திய தருணத்தில்
தன்நாட்டை அறிவது
என்னை உயர்த்தியது
அக்கரை பச்சையென்ற ஆர்வத்தில் ஓடி
இக்கரைப் பச்சையே அழகென்றுணர்ந்து
போன மச்சான் திரும்பிவந்த பூமணமிது