சொர்க்கத்தில் தேனிலவு
சொர்க்கத்தில் தேனிலவு


பனிபடர்ந்த மலைகளும்
பசுமைபோர்த்திய திடல்களும்
தண்ணென்ற நீர்ப்பரப்பும்
கண்ணைக் கவரும் வான்பரப்பும்
உலக வரைபடத்தில் மட்டும் கண்டுகளித்த
என் விதியை மாற்றிய அந்த நாள்
நிழலாய் என்பின்னே மேகங்கள்போல தொடர்ந்த
நினைவுகளைச் சுமக்கவைத்த அந்த நாள்
என் இறக்கைகள் என்னைச் சுமந்து
நாடுவிட்டு நாடுபறக்கும் என்றொரு
நம்பிக்கையை என்னுள் பதித்த அந்த நாள்
அழகுக்கே அழகைக் கற்றுத் தரும்
அற்புதம் கொண்ட என்கனவுதேசமாம்
ஸ்விட்சர்லாந்து நாட்டின் மண்ணில்
கால்வைத்த அந்த இனிய நாள்
வாழ்வுக்கு வண்ணம் சேர்த்து
எண்ணங்களுக்கு நறுமணம் ஈந்து
சொற்களுக்கு சுவைசேர்த்து
என்கவிதைக்கு உயிர்கொடுத்த
மறக்கவொண்ணா மணநாள்